பரிநிர்வாணம்
'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம்,
புத்தரின் போதனைகள் கொண்ட தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார் . பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன.
திரிபிடகம் - புத்தரின் மெய்யியல் திரட்டு. (திரி - மூன்று. பிடகம் - கூடை அல்லது திரட்டு) திரிபிடகம் - சுத்த, வினய, அபிதம்ம. புத்தரின் பரிநிர்வாணத்திற்குப் பிறகு கூடிய பௌத்த சங்கம் திரிபிடகத்தை வரையறுத்து தொகுத்தது என்கிறார் சு.மாதவன்.
அது என்ன, பரிநிர்வாணம்?
திசம்பர் 12-2018 முரசொலி இதழ், 'அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்வும் சிந்தனைகளும் ' என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதியது. முதல் பத்தி, '6.12.2018 அண்ணல் அம்பேத்கரின் 62 ஆவது நினைவுதினம் 'மகா பரிநிர்வாண் திவாஸ்' தினமாக கடைபிடிக்கப்பட்டது' .
தில்லி, அலிப்பூர் சாலை , இலக்கம் 26, அம்பேத்கர் உயிர் துறந்த இல்லத்திற்கு 'டாக்டர் அம்பேத்கர் மஹா பரிநிர்வாண் ஸ்தலம் ' எனப் பெயர்ச்சூட்டி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2003 , டிசம்பர் 2 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
அம்பேத்கரின் ஆசான் புத்தர் - ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய கட்டுரையில் பரிநிர்வாணம் குறித்து அம்பேத்கர், 'உடல், உணர்ச்சிகள், மனம், செயல்கள் யாவும் அடங்கச் செய்வது ' என்கிறார்.
அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் என்கிற நூலில் நான்காவது அத்யாயம் - பரிநிர்வாணம். அதில்,
'நிர்வாணமென்ப தேதோவென்றெண்ண வேண்டாம். உடலுயிர் சேர்க்கைக்கு வாணமென்றும் உடலுயிர் பிரிவிற்கு நிர்வாணம் என்றும் சொல்லப்படும்'.
புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிர்வாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன? என்கிற கேள்விக்கு அயோத்திதாஸப் பண்டிதர், துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிர்வாணம் எதிரிடையாயிருக்கின்றது. ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.
இதிலிருந்து பரிநிர்வாணம் என்பது மரணம் குறித்தச் சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் ஆன்ம ஞானம் அடைதல், இறந்து போகுதல், செத்துப்போகுதல்
சிவஞானம் அடைதல், முக்தி அடைதல், சமாதி அடைதல், இறைவனடி சேர்தல், சாயுஜ்ய பதவி அடைதல், கைலாசப் பதவி அடைதல், வைகுண்டம் சேர்தல், பரமபதம் அடைதல், புத்தராதல், சுவர்க்கம் அடைதல் ,...என பலவாறு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சி.பி.சரவணன் எழுதிய பௌத்த மதப் பிரிவுகள் என்கிற தொடரில் 'பௌத்தம், இருபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டது. அதில் ஹீனயானம் பெரிய பிரிவு. இப்பிரிவுதான் , புத்தரின் நல்லொழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் பரிநிர்வாணம் அடையலாம்' என்கிறது.
பரிநிர்வாணம் என்பது பாலி மொழிச்சொல். சமஸ்கிருதத்தில் அருகதர் ( ஆன்மீக ஞான ஒளி அடைதல்). இதற்கு நிகரான சொற்கள் முத்தி, முக்தி, மோட்சம், ஜீனர். தமிழில் வீடுபேறு என்று சொல்லலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக