இடுகைகள்

ஆவணி அழகனும் ஆனைக்கொம்பனும்

படம்
                                                  நன்றி - இந்து தமிழ் திசை வாழ்வு இனிது செப் 5, 2024 ‘ ஆடி போனால் ஆவணி, ஆளை மயக்கும் தாவணி’ என்பது ஒரு சினிமாப் பாடல். இங்கு ஆவணி – தாவணி இரண்டும் சந்தச்சுவை சொற்கள். தாவணி என்பது வளரிளப் பருவப் பெண் அணியும் ஆடையாகும். ஆவணி மாதம் தாவணி அணிந்தவளுக்கு உடனே திருமணம் கைகூடும் என்பது முன்னோர் நம்பிக்கை. இதைச் சொல்லும் விதமாகவே “ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.” என்கிற பழமொழி விளங்குகிறது. ஆவணி மாதங்களில் சிறப்பானது. கார் காலம் தொடங்குவது இந்த மாதத்தில்தான். நம் அண்டை மாநிலமான கேரள மலையாளத்தில் முதல் மாதம் ஆவணிதான். இம்மாதம் அங்கு சிம்மம் ராசியின் பெயரால் சிங்கம் என்று பெயர்க்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆவணி மாதம் மடங்கல் மற்றும் கார் என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. மடங்கல் என்பது தனித்தமிழ்ச்சொல். இதன் பொருள் சிங்கம். ஆவணி ம...

ஆடித் திங்களும் ஆடித் தமிழும்

படம்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ஆடி என்று பெயர் என்பதாக வேடிக்கையாக கிராமத்தில் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ஆடி காத்துக்கு அம்மியும் பறக்கும் என்பது சொலவம். அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ஆடிவாக்கு. “அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு.” என்பர் கிராமத்தவர்கள். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். ஆடியிலே பிறந்தவன் என்கிற சொல் புழக்கத்தில் உண்டு. ஆடி வந்தால் கூடவே ஜவுளிக்கடை தள்ளுபடி விளம்பரமும் வந்துவிடுகிறது. ஆடி வறட்சியான மாதம் என்பதால் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்றே குறையும். சில பொருள்கள் ஆடி மாதத்தில்தான் விலை கட்டுக்குள் அடங்காமல் எகிறும். ஊர்க்கோவில், நாட்டார் தெய்வங்கள், குலதெய்வ வழிபாடு ஆடியில் நடப்பதால் இம்மாதத்தில் ஊர்ச் சந்தைகளில் ஆட்டுக்கிடாக்கள் குதிரை விலையில் விற்கும். சாமானியன், விவசாயிகளின் வாழ்வில் ஆடி முக்கிய மா...

முட்டளும் முற்றாளும்

படம்
 

புல் - பெரிதினும் பெரிதுகாண்

படம்
தமிழறிஞரும் முதுமுனைவருமான இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர், நூலாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழுக்காக தான் வாழ்ந்த பெருவாழ்வை, அவராற்றிய அளப்பெரியத் தொண்டினை ‘ ஒரு புல் ’ என்கிற தலைப்பில் தன் வரலாற்றாக்கம் செய்திருக்கிறார் இரா.இளங்குமரன். ஓர் அறிஞரின் பெருவாழ்வு எங்ஙனம் ஒரு புல் என்றாகும்...?        மகாகவி பாரதி பார்வையில் புல் என்பது சின்னஞ்சிறிய , அற்பமான ஓருயிரி . ' காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் ; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன் ' . என மரணத் தூதுவன் காலனை ‘புல்’ என்கிறார் மகாகவி பாரதி.                 புல்லுருவி , என்றொரு சொல் தமிழில் உண்டு. இடையூறன் , தீயவன் , கயவன் , தீங்கன் , பதறன் ,... இவர்களைக் குறித்துக் காட்டும் உருவகச் சொல் இது. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்கிற சிறுகதையில், புதுமைப்பித்தன் ‘ கல்லுருவி புல்லுருவி’ என்கிற சொற்றொடரைப்...

தமிழி

படம்
'தடம் பதிக்கும் தமிழி எழுத்துக்கள் ' தினமணி புத்தாண்டு மலர் -2020 இல் வெளியான ஒரு கட்டுரை. தமிழி என்பது என்ன?  கரூர் பரணிபார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும் , திருக்குறள் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன் , தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, வட்டெழுத்து, தமிழ் என்று அழைக்கிறோம் என்கிறார்.தமிழி  எழுத்தில் உச்சரிப்பு அனைத்தும் தமிழில் வரும் உயிர், மெய் எழுத்துக்களின்  ஓசைதான். ஆனால் எழுத்துக்களின் வடிவம் மட்டும்தான் மாறுபட்டவை. குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் ...

அனலி

படம்
2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது. சூரியன் என்பதைத் தனித்துச் சொல்கையில் SUN  என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில் SOLAR  என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் ( SOLAR ECLIPSE),  சூரிய குடும்பம் ( SOLAR SYSTEM ). சன் - சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ? சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு. தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு.  ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என...