கூகா
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடும் பொருட்டு வேட்புமனுதாக்கல் செய்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவில் உள்ள 35ஏ பிரிவை 2020 ஆண்டுக்குள் ரத்து செய்யப்படுமென பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். இச்சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் இந்தியா உடனான காஷ்மீரின் உறவு துண்டிக்கப்படும் எனக் கூறிய அவர் ' காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை கடந்த 2015ம் ஆண்டில் எனது தந்தை முப்தி முகமது சயீத் தயாரித்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வார்த்தைக்கு வார்த்தை கா ப்பி அடித்துள்ளது' என்றார். இச்செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழ் 'காப்பியடிச்சிட்டாங்க! மெகபூபா லபோதிபோ' என செய்தியாக்கியிருந்தது. அது என்னவாம் , லபோதிபோ? தினமலர் நாளிதழ் , ஒரு செல்வாக்கு மிக்கத் தலைவரை அல்லது கட்சியை கேலி செய்கையில் இச்சொல்லை தவறாது ...