மழுக்கம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் இராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் குழப்பம் நிலவியது.
பாஜக தலைவர் அமித் ஷா, அமேதி தொகுதியின் வாக்காளர்களுக்குப் பயந்து தென்னிந்தியா ஓடிவிட்டதாகவும்; நரேந்திர மோடி , குறைந்தளவு இந்து வாக்காளர்கள் கொண்ட தொகுதியைத் தேர்வு செய்திருப்பதாகவும் விமர்சனம் செய்தார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, 'தேசிய அளவில் இடதுசாரிகள் பாஜகவிற்கு எதிராக களமிறங்கிருக்கும் நிலையில் இராகுலின் இந்தப் போட்டி நிலைபாடு ஆரோக்கியமானதில்லை. அவர் போட்டியிட வேண்டியது பாஜகவை எதிர்த்துதான். கம்யூனிஸ்டை எதிர்த்தல்ல' என்றார்.
The Hindu ஆங்கில பத்திரிகை, இராகுலின் தொகுதித் தேர்வை ' Foggy ' என்றெழுதியது.
அது என்ன மயோபியா?

மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி வலுவாக அமைந்திருக்க ; கேரள மாநிலத்தில் போட்டியிடும் இராகுல்காந்தியின் அரசியல் நிலைப்பாட்டை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ' Political Myopia ' என விமர்சனம் செய்தார்.
அது என்ன மயோபியா?
'மயக்கம்' என்றொரு தமிழ் இலக்கணம் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்குத் தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் 'யானோ அரசன் ?' எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டது மயக்கமாகும். மயக்கம் பல வகை. மெய் மயக்கம் ( தமிழ் என்பதை தமிள் என்றெழுவது ) , பொருள் மயக்கம் ( அரி என்பதை புலி என்று பொருள் கொள்வது ) , வேற்றுமை மயக்கம் ( நரியை ஓநாய் என்பது ).
தன்னிலை மறப்பதும் மயக்கமே !
மனிதனின் பார்வைக் குறைப்பாட்டில் கிட்டப்பார்வை ( Nearsightedness)
என்கிற ஒன்றுண்டு. அருகிலுள்ள பொருளை மட்டும் காண முடிந்து தூரத்திலுள்ள பொருளைக் காண முடியா நிலை. கண்வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பால் கண்கோளம் நீட்சியுறுகிறது. இதனால் உட்செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்பட,பிம்பம் தெளிவற்றதாகத் தெரியும். இதற்கு கிட்டப்பார்வை என்று பெயர்.
கிட்டப்பார்வை , மயக்கம் இரண்டிற்கும் ஆங்கிலத்தில் 'மயோபியா' என்றே பெயர்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தொலைநோக்கற்றப் பார்வையை பொருளாதார வல்லுநர்கள் Ecnomic Myopia என அழைக்கிறார்கள்.
இங்கு பினராயி விஜயன் குறிப்பிடுவது, Political myopia .
அமெரிக்க ஊடகவியலாளர் LAUREN REIFF , அரசியல் மயோபியா என்பதற்கு 'Good politics , Bad policy ' என வரையறை செய்கிறார்.
Political Myopia என்பதை தமிழில் மயக்க அரசியல், கிட்டப்பார்வை அரசியல், பனிமூட்ட அரசியல் எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். இருப்பினும் மயோபியா என்பதற்கு 'மழுக்கம்' எனப் பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
மழுக்கம் என்பதன் வட்டார வழக்கு மொண்ணையாக்கல்.
'ஊக்க நிலே பொருட்குறை யாவும் புலக்குறைவே / ஐயம் மருட்கறைகள் சூழின் மழுக்கே ! ' என்கிறது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு. இப்பாடலின் பொருள், ஒரு செயலைச் செய்யும் கருவியின் குறை என்பது செய்பவரின் புலனக் குறையே. அக்குறையோடு ஐயம், மருட்சி சேர்ந்துவிட்டால் வினையில் மழுக்கம் உண்டாகும் என்கிறது பாடல்.
'ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே' என்கிறது நற்றிணை.
'அதிகக் கூர்மை மழுங்கல் ' என்கிறது ஒரு சொலவடை. மழுங்கல் என்கிற சொல்லின் சரியான பதம் மழுக்கம்.
கூர்மை × மழுக்கம்
மழு - கோடரி ( சூடாமணி ); பழுக்கக் காய்ச்சிய இரும்பு.
மழுக்கம் என்பதன் வேர்ச்சொல் முள் (மள்) - மழு - மழுகு - மழுங்கு - மழுக்கு - மழுக்கம்.
மழு - மழுங்கிய , அதிகமான எனவும் பொருள் கொள்ளலாம்.
மழுக்கம் என்பதற்கு செந்தமிழ் அகராதி - கூரின்மை , நிலைமைத் தாழ்வு ,ஒளிமழுங்குகை, விவேகக்குறைவு எனப் பலவாறு பொருள் தருகிறது.
நெல்லை ஒருமுறை குத்தியெடுத்த தவிடு நீங்காத அரிசிக்கு மழுக்கல் என்று பெயர். நெல்லை உரலிலிட்டு உலக்கையால் குத்துவதும் மழுக்கலே.
மழுக்கம் என்பதற்கு தொடுவானம் என்றொரு பொருளுண்டு. தொடுவானம் அழகியலுக்கு உவமையாகச் சொன்னாலும் பேரிலக்கற்ற குறுகியப் பார்வையைக் குறிக்கும் ஒரு சொல்.
தொடுவான சிந்தனை - விரிவான சிந்தனை இருவேறு சிந்தனைகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக