இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனலி

படம்
2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது. சூரியன் என்பதைத் தனித்துச் சொல்கையில் SUN  என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில் SOLAR  என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் ( SOLAR ECLIPSE),  சூரிய குடும்பம் ( SOLAR SYSTEM ). சன் - சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ? சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு. தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு.  ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என...

ஓலக்கம்

படம்
மக்களின் பாடகர் ' மருதமலை மாமணியே முருகையா' மதுரை சோமு ( 1919 - 2019) நூற்றாண்டை முன்னிட்டு இசை விமர்சகர் எஸ்.சிவகுமார் தி இந்து நாளிதழில் ' சோமு நீ சமானம் எவரு ' என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். அறுபதுகளின் பிற்பகுதி சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு கோயில் கச்சேரி. அன்றெல்லாம் சபா கச்சேரிகளை விட கோயில் கச்சேரிகளே அதிகம். செலவில்லாமல் சங்கீதப் பிரவாகத்தில் விடாய் தீர்ந்த பொற்காலம். அன்று கோயிலில் மகாவித்வான் சோமுவின் தர்பார். தெருவெல்லாம் கூட்டம் அலைமோதியது... சரி, தர்பார் என்பது என்ன? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்திருக்கும் திரைபடம் 'தர்பார்'. பாரசீகம் ( ஈரான் ) நாட்டின் கெர்மான் மாகாணம் மன்னராட்சியின் தலைமையிடமாக இருந்தது. அந்த மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் தர்பார் ( Darbar). இங்கு பாரசீகர்களின்  நீதி பரிபாலனம் நடந்தேறியிருக்கிறது. Durbar என்பது உருது சொல். இதற்கு நீதி என்று பொருள். இச்சொல்லிலிருந்து திரிந்தது Darbar. Darb + bar/ darb என்பதற்கு உருது மொழியில் இல்லம், அரண்மனை, மன்றம் என்றும் Bar என்றால் வாயில் ...