இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாம்பு

படம்
மும்பை ஐ.ஐ.டி  பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,' உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான்' என்றார். இவ்வுரைக்கு புலவர் பா.வீரமணி வண்ணக்கதிரில் 'பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி'  என்கிற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதினார். இராஜாராம் மோகன்ராய் உருது, அரபு, பாரசீகம், ஆங்கிலம் தெரிந்த பன்மொழி அறிஞர். பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருத்தவம், வேதம், உபநிடதங்கள் அறிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியினர் சமஸ்கிருதம் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்டமிட்டபோது கவர்னர் ஜெனரல் ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு 11.12.1823 அன்று நீண்ட கடிதம் எழுதினார். 'சமஸ்கிருதம் இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடைக்கச் செய்கிறது. இதுவே பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்குமானால் சமஸ்கிருதக் கல்வி முறை போதுமானதாகும்'. (ஆதாரம் -  இராஜாராம் மோகன்ராய் - சௌமியேந்திரநாத் தாகூர் - 1972 - சாகித்திய அகாதமி ). ' வடமொழி நம்மை தூக்கிடும் தாம்பு - நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு ' எ...

ஒள்ளி

படம்
சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் 1796 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் மரங்களலான கோபுரமாக அமைக்கப்பட்டு பிறகு அது கேப்டன் ஸ்மித் என்பவரால் எஸ்பிளனேடு ( பாரிமுனை) பகுதியில் கட்டுமானமாக நிறுத்தப்பட்டது.   இதேபோன்று 1892 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மற்றொரு விளக்கம் இன்று சென்னை உயர்நீதி மன்றம் வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ளது. இந்த இரண்டாவது கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை,  சென்னை தினம் உருவான நாளான  ஆகஸ்ட் 22, 2019 அன்று வெளியிடப்பட்டது.  கலங்கரை விளக்கம் - இதன் சங்கப் பெயர் என்ன? இன்று Lighthouse என அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் முன்பு BEACON என அழைக்கப்பட்டது. கிமு 280 இல் எகிப்து அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் அமைக்கப்பட்ட BEACON LIGHT உலகின் முதல் கலங்கரை விளக்கம் என்கிறது வரலாறு. இதற்கு நாதீ, குன்றின் மேலிட்ட விளக்கு, வழிக்காட்டொளி, தீப்பந்தம், குறிவிளக்கு எனப் பல பொருளுண்டு. இதற்கு முன்பே தமிழகத்தில் கலங்கரை விளக்கம் இருந்ததாக சங்கப் பாடல்கள் உண்டு. சங்க காலத்தில் தெற்கிலிருந்து வடக்காக அமையப்பெற்ற த...

படிறு

படம்
நாடாளுமன்றத் தேர்தலில் பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடத்தப்பட்டு ஆகஸ்ட் 8 அன்று முடிவு வெளியானது. இத்தேர்தலில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார். ஆனால் அன்றைய தின மாலை முரசு பத்திரிகை '  அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி' என்பதாகத் தலைப்புச் செய்தியுடன் கூடிய செய்தி வெளியிட்டது.   ஒரு பத்திரிகைக்குத் தலைப்புச் செய்தி இடுவதை ' மகுடமிடல் ' என்கிறார் பாரதியார். சக்கரவர்த்தினி மற்றும் இந்தியா இதழ்களில் ஆங்கிலத் தலைப்பிற்கும் கீழே தமிழில் தலைப்பிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்த பாரதி, பிறகு  இந்தியா, விஜயா, கர்மயோகி முதலிய இதழ்களில் தமிழில் மட்டுமே தலைப்புச் செய்தி அமைத்தார்.  ஒரு பத்திரிகையின் மகுடமிடல் தவறென்றால், அதை எப்பெயரால் அழைப்பது? அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பின் இணைய பக்கத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதாக அமெரிக்க பத்திரிகைகள் மகுடமிட, அதற்கு அதிபர் ட்ரெம்ப் தனது சுட்டுரையில், NBCN, ABC, CBS, CNN செய்த...

ஓற்பலம்

படம்
தேவதாஸ் , சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய காதல் காவியம்.  பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தேவதாஸ் ,  (தந்தை நாராயண முகர்ஜி) . தன் பக்கத்து வீட்டு சிறுமி பார்வதியுடன் சேர்ந்து விளையாடுகிறான்.  இவனது அன்பை விடவும் அவள் காட்டுவது பேரன்பாக இருக்கிறது. குழவிப் பருவத்தில் துவங்கும் இந்தப் பாசப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் காதலில் வந்து நிற்கிறது. பார்வதியின் தந்தை நீலகண்ட சக்கரவர்த்தி மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். தேவதாஸ், தன் பெற்றோருடன் பார்வதிக்காக பேசுகையில் அக்குடும்பம் தமக்கு நிகரானக் குடும்பமல்ல என மறுத்துவிட பார்வதி, புவன் சௌதுரி என்கிற செல்வந்தருக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படுகிறாள்.  பார்வதியின் பிரிவு தேவதாஸைக் கவலையில் தள்ளி குடியில் ஆழ்த்துகிறது. அவனது நிலையைக் கண்டு கவலைப்படும் சந்திரமுகி என்கிறவள் அவன் மீது நேசம் கொள்கிறாள். அவளிடமிருந்து விலகும் தேவதாஸ்  தந்தை மரணத்திற்குப் பிறகு சொத்துகளை விற்று , குடித்து, நோயுற்று,  மரணவாயிலை நெருங்கி பார்வதி வீட்டு வாசல் முன் இறந்து கழுகுகளுக்கு இரையாகிறான்.  இந்நாவலின் ஓரிடத்தி...