இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆவணி அழகனும் ஆனைக்கொம்பனும்

படம்
                                                  நன்றி - இந்து தமிழ் திசை வாழ்வு இனிது செப் 5, 2024 ‘ ஆடி போனால் ஆவணி, ஆளை மயக்கும் தாவணி’ என்பது ஒரு சினிமாப் பாடல். இங்கு ஆவணி – தாவணி இரண்டும் சந்தச்சுவை சொற்கள். தாவணி என்பது வளரிளப் பருவப் பெண் அணியும் ஆடையாகும். ஆவணி மாதம் தாவணி அணிந்தவளுக்கு உடனே திருமணம் கைகூடும் என்பது முன்னோர் நம்பிக்கை. இதைச் சொல்லும் விதமாகவே “ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.” என்கிற பழமொழி விளங்குகிறது. ஆவணி மாதங்களில் சிறப்பானது. கார் காலம் தொடங்குவது இந்த மாதத்தில்தான். நம் அண்டை மாநிலமான கேரள மலையாளத்தில் முதல் மாதம் ஆவணிதான். இம்மாதம் அங்கு சிம்மம் ராசியின் பெயரால் சிங்கம் என்று பெயர்க்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆவணி மாதம் மடங்கல் மற்றும் கார் என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. மடங்கல் என்பது தனித்தமிழ்ச்சொல். இதன் பொருள் சிங்கம். ஆவணி ம...

ஆடித் திங்களும் ஆடித் தமிழும்

படம்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ஆடி என்று பெயர் என்பதாக வேடிக்கையாக கிராமத்தில் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ஆடி காத்துக்கு அம்மியும் பறக்கும் என்பது சொலவம். அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ஆடிவாக்கு. “அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு.” என்பர் கிராமத்தவர்கள். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். ஆடியிலே பிறந்தவன் என்கிற சொல் புழக்கத்தில் உண்டு. ஆடி வந்தால் கூடவே ஜவுளிக்கடை தள்ளுபடி விளம்பரமும் வந்துவிடுகிறது. ஆடி வறட்சியான மாதம் என்பதால் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்றே குறையும். சில பொருள்கள் ஆடி மாதத்தில்தான் விலை கட்டுக்குள் அடங்காமல் எகிறும். ஊர்க்கோவில், நாட்டார் தெய்வங்கள், குலதெய்வ வழிபாடு ஆடியில் நடப்பதால் இம்மாதத்தில் ஊர்ச் சந்தைகளில் ஆட்டுக்கிடாக்கள் குதிரை விலையில் விற்கும். சாமானியன், விவசாயிகளின் வாழ்வில் ஆடி முக்கிய மா...