பகம்
ஆந்திர மாநிலம், சித்தூர் ( தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியிலிருந்து கடந்த 2009 ஆண்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 -14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையெடுத்து ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவபெருமான், அம்பேத்கர், நாரதர், கலைஞர், எம்.ஜி.ஆர், அகத்தியர், ஹிட்லர், நாதஸ்வர வாசிப்பாளர்,..என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செப்-21, 2019 அன்று அவர் மறைந்ததையடுத்து பதினெட்டு கதாபாத்திரங்கள் கொண்ட கோப்புப் படத்துடன் கூடிய இரங்கல் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'நவராத்திரி' என்கிற திரைப்படத்தில், அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் நடித்துள்ளார். நவம் என்றால் ஒன...