இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதலை

படம்
பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.  'மிகச் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார் ' எனப் பதிவிட்ட அப்பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொஞ்சுவதும் , விளையாடுவதுமாக இருந்தார். கடுமையான முகத்துடன் இருக்கும் மோடி, இந்தப் புகைப்படங்களில் மிக மகிழ்ச்சியாகத் தெரிந்தார்.  இதுபோன்று கவனத்திற்குள்ளாகும்  குழந்தைகளுக்கு மொழியியல் சூட்டும் பெயர்கள் என்ன? சீனப் புரட்சியின் போது 'லீ 'யின் தந்தையை தேசியப் படையினர் கொன்றுவிட, லீ தாயிடம் வளர்கிறார். இவ்வாறு தந்தையற்ற குழந்தை  'கைம்பெண் குழந்தைகள் (faderleas baby)' என அழைக்கப்படுகிறார்கள் . இந்த வரிசையில் தாயில்லா குழந்தை - 'பிறப்பு விரும்பாக் குழந்தை'. ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தில் கிளாடியஸ், ஹேம்லட்டின் தந்தையைக் கொன்றுவிட அவன் தந்தையில்லாமல் , தாய் யாரென்றும் தெரியாமல் வழிப்போக்கனால் எடுத்து வளர்க்கப்படுகிறான் - இவன் 'தத்துப்பிள்ளை( Toddler baby)'. திருமணமாகாமல் பிறக்கும் குழந்தை  'ஊற்றுக்குழந்தை...

ஒழுகு

படம்
ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளம் முகமது யாசின், அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறவன். கடந்த ஆண்டு சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டுபோய் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணத்தை ஒப்படைத்திருக்கிறார். இச்செய்தி ஊடகங்களில் வெளிவர, நடிகர் ரஜினிகாந்த் முகமது யாசினை  தனது வீட்டிற்கு வரவைத்து பாராட்டியதுடன் அவனது கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டார்.  இச்சம்பவம் இரண்டாம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடத்தில் 'நேர்பட ஒழுகு' கார்ட்டூன் விளக்கப் பாடமாக இடம் பெற்றுள்ளது.  ஒழுகு என்பது என்ன?  "வண்ணந்   தானே நாலைந்தென்ப ..” என்கிறது தொல்காப்பியம். வண்ணம் என்பது பா( பாடல்) வின் நடையழகு. 4×5 =20  இருபது வண்ணங்களில் ஒரு வகை ஒழுகு வண்ணம்.  ஆற்றுநீர் பொருள்கோள் பாடல்கள் , நீரோடைப் போல பேசுதல் யாவும் ஒழுகு வகையைச் சேர்ந்தவை.  வாய்க்கொழுப்பு சீலையில் ஒழுகுதாம் - கிராம சொலவடை .  ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தனும் (ஒன்பது துளைகளுள்ள ஒழுகு உடம்பு...

தம்பிரான்

படம்
வணிகம் செய்ய இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள்  கடலோர மக்களை  கிறித்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அவர்களிடம் உரையாடுவதற்கு தமிழ்மொழி தேவைப்பட்டது. அதற்காக 'கார்ட்டிலா'  என்கிற நூலை அச்சிட்டார்கள். ஆண்டு கி.பி.1554 பிப்ரவரி, 11. இந்நூல் போர்ச்சுகல் தலைநகர் ஸிஸ்பனில் வெளியானது.  தமிழ் அல்லாது தமிழ் ஒலிப்பில் அச்சேரிய  நூல் இது. எழுத்துரு - ரோமன் லிபி; உச்சரிப்பு - தமிழ்.  உலக அச்சு இயல் வரலாற்றுக்கு அரும்பெரும் சான்றாக விளங்கும் கார்ட்டிலாவின் ஒரே ஒரு பிரதி  லிஸ்பன் நகர் பெலம் அருங்காட்சியகத்தில் ஒரு இரும்பு பெட்டகத்திற்குள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னவர் தனிநாயகம் அடிகளார். ( ஆதாரம் , ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர் ). 1542 ஆம் ஆண்டு, போர்ச்சுக்கீசிய பாதிரியார் புனித சவேரியார், கோவா வருகிறார். புதிதாக கிறித்தவ மறை தழுவிய மக்களுக்கு ஜெப மந்திரங்கள் சொல்லிக்கொடுப்பதற்காக DOCTRINA CHRISTAM என்கிற நூலை போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். இந்நூலை 1578 ஆம் ஆண்டு, ஹென்றிக்ஸ் அடிகளார் தமிழில் ' தம்பிரான் வணக்கம் ' என  மொழிபெயர்...