இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓம்

படம்
தில்லி திகார் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்தார் ஷபீர் என்கிற நபீர்.  இஸ்லாமியரான இவர் குற்றவழக்கு ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையிலிருந்து வருகிறவர். ஒருநாள் சமையல் பணியின்போது , இன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லையென்று, சிறைக் கண்காணிப்பாளர்  ராஜேஷ் சவுகானிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுகான் , கம்பியைப் பழுக்கக் காய்ச்சி, நபீரின் முதுகில் 'ஓம் ' என்கிற தேவநாகிரி இந்து மத அடையாள எழுத்தை ॐ எழுதியுள்ளார். இக்கொடுமையை தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட, நீதிபதி நபீருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானை உடனடி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஓம் என்பது எம்மொழிச்சொல், அதன் பொருள் என்ன? மின்துறையில் மின்தடையின் அலகாக ஓம் குறிக்கப்படுகிறது. இந்த விதியை வரையறுத்தவர் ஜார்ஜ் சைமன் ஓம் என்கிற ஜெர்மன் விஞ்ஞானி. ஓம் - பிரணவ மந்திரம் என்கிறது புராணக் கதை. இந்த மந்திரத்தை படைத்தல் தொழிற்கடவுள் பிரம்மன் மறந்துவிட்டதால் பிரம்மனை தமிழ்க்கடவுளான   முருகன் சிறையில் ...

அதலகுதலைமை

படம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்,  மத்திய அரசின் அரசாணையில் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் - 5 அன்று  பிரதமர் நரேந்திர மோடி,  அந்நிலையத்திற்கு PURATCHI THALAIVAR DR.M.G.RAMACHANDRAN CENTRAL RAILWAY STATION எனப் பெயர்ச்சூட்டியதற்குப் பிறகு  இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் என்கிற சிறப்பைப் பெற்றது. அதே நேரத்தில் ஒரே ஒரு எழுத்தின் குறைவால்  உலக பிரசித்தம் வாய்ப்பை இழந்திருக்கிறது. இப்பெயரின் மொத்த எழுத்துகள் - 57.  இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட வெல்ஸ் என்கிற நாட்டில் Llanfairpwllgwyngyll நகர புகைரத நிலையத்தின்  பெயர், LLANFAIRPWLLGWYNGYLLGOGERYCHWY RN DROBWLLLLANTYSILIOGOGOGOCH. இப்பெயரிடல்  ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு  மூன்று மொழிகளானது.  இதன் மொத்த எழுத்துகள் 58. உலகில் வாசிப்பதற்கு கடினமான, நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் இதுதான். கேரள மாநிலம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மேனாள் மத்திய அமைச்சர் சசி தரூர்   'THE PARADOXICAL PRIME MINISTER - Narendra modi and his India ' ( முரண்பாடான பிரதம ...

முடங்கல்

படம்
இந்தியாவில் புல்வாமா தீவிரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீதான பால்காட் தாக்குதல்,... இரு நாடுகளுக்குமிடையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் இத்தருணத்தில் , மார்ச் 22 அன்று ,பாகிஸ்தான் கொண்டாடிய தேசிய தினத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அவ்வாழ்த்துச் செய்தியை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்தார். இந்திய மக்கள் முன் பாகிஸ்தானை எதிரியாக நிறுத்தல் ,  வாழ்த்துவித்தல் என மோடியின் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜெவாலா ' Mr.Modi  should stop writing love letters ' என தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  Letter என்பதற்கு எழுத்து, எழுத்துரு, மடல், விகிதம், தபால், காகிதம், அஞ்சல், தூது, காயிதம், கடுதாசி, ஓலை, நிருபம்,  மடங்கல், முடங்கல் என பலச் சொற்களில் பொருள்கொள்ளப்படுகின்றன.  எழுதப்படும் கடித வகைகளில் ஒன்று காதல் கடிதம். இந்தியாவில் ' love letter'  என்கிற பதம் சர்ச்சையானது . இதற்கு முன்பு தம...

பொருநன்

படம்
'போலி தேசப்பற்றுக்கான முதல் விதி  '  அரசியல் கருத்தியலாளர்  ஜி.சம்பத் எழுதிய ஒரு கட்டுரை. அதில், தன் தேசப்பற்றை இவ்வாறு வெளிபடுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.  1. கட்டுரையின் ஒவ்வொரு பத்தி முடிவிலும்   ஜெய் ஹிந்த் என எழுதிவிடுகிறேன்.  2. அரசைக் கேள்வி கேட்க மாட்டேன்  3. ஆண்டி இந்தியன் என்கிற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இக்கட்டுரைக்கு அவர் சூட்டியத்  தலைப்பு 'The first rule of jingo '. ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக் விஜய்சிங் , நரேந்திரமோடியை warmonger modi என அழைத்திருந்தார். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகான மோடியின் நடவடிக்கையை வைத்து அவ்வாறு அழைத்திருந்தார். தேர்தலுக்காக , மக்களைக் கவரும் பொருட்டு நரேந்திர மோடி தன் பெயருக்கு முன்  chowkidar  என்கிற சொல்லை இணைத்துக்கொண்டார். சௌகிடார் என்கிற இந்தி சொல்லுக்கு காவலர் ( guard ) என்று பொருள். Jingo , warmonger , chowkidar இம்மூன்றும் மோடி தலைமையிலான பாஜக கட்சியின் தேர்தல் பரப்புரைச் சொற்கள்.  இவை  போர் அல்லது ப...

பொங்கோதம்

படம்
வலைதளங்களில் பாராட்டும் , எதிர்ப்புமென  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது surf excel சலவைத்தூள் விளம்பரம். இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம்  தயாரிக்கும் பல்வேறு நறுமண பொருட்களில் ஒன்று சர்ஃப் எக்ஸெல். ஹோலி பண்டிகையை மனதில் வைத்து, 'வண்ணங்கள் நம்மை ஒன்றிணைக்கிறது' ( ரங் லாயே சங்) என்ற கோஷத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்த விளம்பரப் படத்தில் இரண்டு இளம் சிறார்கள் நடித்திருந்தனர்.  ஒரு இந்து சிறுமி , சைக்கிளில் தான் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வந்தபடியே, தன்மீது சாயத் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்குமாறு கூறுகிறாள். அங்கிருக்கும் சிறுவர்களும் அவள்மீது கலர் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்கிறார்கள். இதில், அவளது ஆடை முழுவதும் கலர் அப்பிக்கொள்கிறது. அதேசமயம், சிறுவர்களிடம் மேற்கொண்டு அடிப்பதற்கு பலூன்கள் இல்லாமல் காலியானவுடன், தனது நண்பனான இஸ்லாமிய சிறுவனை வெளியில் வருமாறு சைகை செய்கிறாள். தூய வெண்மையான ஆடை மற்றும் தலையில் குல்லா அணிந்து வரும் அந்தச் சிறுவனை, அந்தச் சிறுமி தனது சைக்கிளில் ஏற்றிச்சென்று, அருகில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக இறக...

அணையாடை

படம்
இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கிய PERIOD - end of sentence என்கிற இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.  இதற்கு முன்பு எடுக்கப்பட்ட PAD MAN பாலிவுட்  திரைப்படம் வட இந்தியாவில் பரவலான கவனிப்பைப் பெற்றது. இப்படம் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து மேலும் குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதைச் சேவையாகக் கொண்டிருக்கும் கோவை அருணாச்சலம் முருகானந்தத்தைக் கௌரவிக்கும் பொருட்டு  எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.  ஆஸ்கர் விருது பெற்ற PERIOD படமும் அவரது வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட  குறும்படமுமே.  பிரீயட் என்பது என்ன, பள்ளியில் மணி அடிக்கத் துவங்குவதா? பிரீயட் என்பது மாத விலக்கு. அதாவது, வாயு வெளியேற்றம் போல் உதிர வெளியேற்றம்( அகத்தியர் மருத்துவம் ). மாத விலக்கு காலத்தில் வெளியாகும்  உதிரத்தை  பட்டினத்தார் 'சுரோணிதம்' என்கிறார். 'சுக்கில சுரோணிதங்களாலே உடம்புகொண்டு' என்கிறது சிலப்பதிகாரம்.  கேரள மாநிலம் பத்தனம்திட்டையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நவமி, மாதவிலக்கு குறித்த...

கோதாட்டம்

படம்
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா குறித்து  கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிச்சேர்ந்த  ப்ரபுல் படேல் ' இதுவும் ஒருவகை ஜும்லாஸ் '   என்றார். பிஜேபி உடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசக்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கச்சொல்லி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. வாக்கெடுப்பு நாளன்று  உரையாற்றிய ராகுல்காந்தி , 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம்  'ஜூம்லா தாக்குதல்' என்றவர் இதன் அறிகுறிகள் முதலில் உற்சாகம், அடுத்து மகிழ்ச்சி, கடைசியாக பெரும் அதிர்ச்சி ' என்றார். இச்சொல்  இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொல் இதுதான். 'மோடியின் நான்காண்டுகால வேதனைகள் ' சீத்தாராம் யெச்சூரி எழுதிய ஒரு கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' நரேந்திர மோடியின் முழக்கங்கள் அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்க...

வனிதை

படம்
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் விடயத்தில் ஆண், பெண் பேதமற்ற சமத்துவம் நிலவ வேண்டுமென வலியுறுத்தி  காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான  பெண் சுவர்க்கு கேரளம் கடந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா,  மராட்டிய மாநிலங்களென  பெண்களின் ஆதரவு பெருமித்திருந்தது. ஒரு முனை ( காசர்கோடு) யில்   கேரளாவின் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கரம் கோர்த்து நிற்க ,  மறுபுறம்  திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத். இதற்கிடையிலான தூரம் 640 கிமீ, ஐம்பது இலட்சம் பெண்கள். இந்த மனிதச் சங்கிலி சுவரை திருவனந்தபுரம் வெள்ளியம்பலம் மகாத்மா அய்யன்காளி சிலைக்கு மாலை அணிவித்து  துவக்கி வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் பெண்களுக்கான சமத்துவ உரிமையையும் ஆளும் இடது முண்ணனி அரசு  எவ்விலைக் கொடுத்தேனும் நிலைநிறுத்துமென உறுதியளித்தார். இதன் விளைவாக, அன்றைய தினமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் கோவிலுக்குள் நுழைய  சங்பரிவாரங்கள் கலவரத்தை மூட்டினர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த  இந்த  மனித சங்கிலி பெண் சு...

குழூஉக்குறி

படம்
Et, Tu, Bruto ? -  இதுவே ஆங்கிலத்தில் You too Brutus ? ( நீயும் கூடவா புரூட்டஸ்?) . ஜூலியஸ் சீசர் இறப்பதற்கு முன்னால் உச்சரித்த கடைசி சொற்றொடர் இது.  ஜூலியஸ் சீசர் - ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகம். போரில் வெற்றிவாகை சூடிய சீசரைக் கொண்டாட ரோம் மக்கள் சூழ்ந்திருக்க புரூட்டஸ், சீசரைக் கொல்ல திட்டம் தீட்டுகிறான்.  குடியரசு நாடாக இருக்கும் ரோம் , சீசரின் அடுத்தடுத்த வெற்றியால் முடியாட்சியை நோக்கி நகர்கிறதே என்கிற கோபம்தான் சீசரைக் கொலை செய்யத் தூண்டுகிறது.  கொலைக்குப்பிறகான இறுதி அஞ்சலி கூட்டத்தில் புரூட்டஸ் பேசுகிறான். 'நான்  சீசர் மீது பேரன்பு காட்டுகிறவன். அதற்கும் மேலாக ரோம் மீது காட்டுகிறேன்...' இந்த நாடகத்தில் இரண்டு புரூட்டஸ் வருகிறார்கள். மார்க்கஸ் புரூட்டஸ் , டெசியஸ் புரூட்டஸ்.  சீசரின் மனைவி கல்பூர்னியா, குறி சொல்லி இருவரின் வேண்டலையும் ஏற்று செனட் அவைக்குச் செல்ல மறுக்கும் சீசரை பேச்சால் கவர்ந்து அழைத்து வருபவன் டெசியஸ் புரூட்டஸ். சீசரின் இடுப்பில் முதலில் வாளினை காஷியஸ்  பாய்ச்ச, முப்பது காயங்களுக்குப் பிறகு கடைசியாக முதுகில் குத்துகிறான் மார்க்...

அஞரின்பர்

படம்
திசம்பர் 16,  சோனியா காந்தி , ராகுல்காந்தி கலந்துகொண்ட அண்ணா அறிவாலய கலைஞர் சிலை திறப்பு விழாவிற்குப் பிறகான பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடியை 'சேடிஸ்ட் ' பிரதமரென விமர்சனம் செய்தார். இச்சொல் குறித்து தினசரிகள் அவ்வளவாக கண்டுகொள்ளாமல்  கடந்து போக முரசொலி இவ்வாறு தலைப்புச் செய்தியாக்கியிருந்தது. 'பரம்பரை மன்னர் போல் செயல்படும் 'சேடிஸ்ட்'மோடியின் நாசிச, பாசிச ஆட்சியை வீழ்த்தி  புதிய இந்தியாவை உருவாக்க ராகுலே வருக!நல்லாட்சித்  தருக!'. இதே சொல்லை அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தின் மீதான அறிக்கையில் 'தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் சேடிஸ்ட் மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுகிறது' என்றிருந்தார். தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆந்திரப்பிரதேசம் நந்தியால் தொகுதி எம்.எல்.ஏ பூமா நாகிரெட்டி மரணமடைய அத்தொகுதிக்கு நடைப்பெற்ற  இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திரப்பிரதே...

பரிநிர்வாணம்

'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  . பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்யியல் திரட்டு. (திரி - மூன்று.  பிடகம் - கூடை அல்லது திரட்டு) திரிப...

அபலை

Letter from an un-known woman என்றொரு குறுநாவல். ஜெர்மன் எழுத்தாளர் ஸ்ரிபன் செவாக் ( Stefan Zweig ) எழுதியது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளருக்கு எழுதும் கடிதமே இந்நாவல்.  இரா என்கிற  எழுத்தாளரை ஒரு  பெண் வாசகர் தனியாக சந்திக்கிறாள். இருவருக்குமிடையே நீளும் உரையாடல் உடலிச்சையில் சென்று முடிகிறது. தவறான உறவால் ஒரு குழந்தை பிறந்து அது இறந்தும் விடுகிறது. குற்றவுணர்விற்குள்ளாகும் அப்பெண் நடந்த சம்பவத்தை தன்பெயர் குறிப்பிடாமல்  நாவலாசிரியருக்கு  கடிதம் எழுதுகிறாள். அக்கடிதமே நாவல்.  இந்நாவல் வெளியானதும் நாவலாசிரியரிடம் தவறாது கேட்டக் கேள்வி, ' இச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததா ? ' என்பதுதான். இந்நாவலை இலங்கை நாவலாசிரியர் செ.கணேசலிங்கம்  'அபலையின் கடிதம் ' என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தார். The fox with the golden tail (பொன்வால் நரி  ) - மகாகவி பாரதி எழுதிய ஆங்கில சிறுகதை. இந்திய விடுதலைப் போராட்டம் திலகர், அரவிந்தர்,...தலைமையில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது இவர்களின்  போராட்ட முன்னெடுப்பை கடுமையாக எதிர்த்தார் அன்னிபெசன்ட் அம்மையார். இவர்...

குஞ்சரம்

படம்
திசம்பர் மாத காக்கைச்சிறகினிலே இதழில் ' ஊர்சுற்றிக் காக்கையாரின் குஞ்சரங்கள்' - பேரா.ந.சண்முகரட்ணம்  எழுதி முகுந்தன் தொகுத்த பத்திக் கட்டுரை. நோர்வே , கலாச்சார மையத்தில் 'ஞானரதம்'( பாரதியார் எழுதியது ) கவிதையின் நாட்டிய அஞ்சலி நடந்தேறியது.  பரம ஏழையாக இருப்பதால் உயர்ந்த இன்பங்கள் எதையும் பெற முடியவில்லையே, என வருந்தும் பாரதிக்கு ஈசன் ஞானம் என்கிற தேய்வீக ரதம் கிடைக்கிறது. அதைக்கொண்டு உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் சென்று பார்க்கிறான். நான்கு லோகத்திலும் கந்தர்வலோகம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அங்கு பர்வதகுமாரி என்கிற கந்தர்வ அழிகையைக் காணுகிறான். அந்த அழகியின் அழகில் சொக்கி,அவளுடன் பரவசத்தில் இருக்கும் கணத்தில் 'படேர்' என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண் விழித்தபோது மீண்டும் பழையபடி தன் ஏழ்மை வீட்டில் இருப்பதை உணர்கிறான். இது ஞானரதத்தின் கதை. இக்கதைக் குறித்த விமர்சன போக்குடன், இன்னும் நான்கு பதிவுகள் கொண்ட பத்தி எழுத்திற்கு அவர் சூட்டியத் தலைப்பு ' குஞ்சரம் '.  அது என்ன குஞ்சரம்..? விழுப்...