நக்கன்
'சிந்துசமவெளிக்கு ஒளி தந்தவர் ' - 27.11.2018 அன்று தினமணியில் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு குறித்து முனைவர் ம. இராசேந்திரன் எழுதிய கட்டுரை.
கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு மைசூரிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அது மத்திய அரசு நிறுவனம் என்பதால் பெயர் பலகையில் இந்தி கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். ஆகவே மாற்றுவழியில் யோசித்து பேரா.இராசவேலு உதவியுடன் பெயர் பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதி கலைஞரிடம் கொடுக்க , அவர் அதை ஐராவதம் மகாதேவனிடம் காட்டி சரிப்பார்த்து வர வேண்டுமென கேட்க, அவரது பார்வைக்கு பிறகு பெயர்ப்பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது.
ஜேஎன்யூ தலைவரும் காலச்சக்கரம் நாளிதழின் ஆசிரியருமான கா.குமார் எழுதிய இரங்கல் கட்டுரையில் 'பிராமி எழுத்து எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்களை தமிழ் பிராமி எனத் திருத்தியவர் ஐராவதம் மகாதேவன்..'.

செம்மொழி மாநாட்டு இலச்சனையில் திருவள்ளுவரைச் சுற்றி இடம் பெற்ற எழுத்துருக்கள் ஐராவதம் சரிபார்த்த தமிழ் பிராமி எழுத்துகளே.
ம.ரா,கட்டுரையின் தொடர்ச்சியில் "சித்தனவாசல் கல்வெட்டிலிருக்கும் 'நக்கன்' என்கிற சொல் ஆண், பெண் இரு பாலருக்குமான பொதுவானச் சொல் என்கிற அவரது விளக்கம் பலரால் பெரிதும் பாராட்டப்பெற்றது" என்றிருந்தார். இக்கட்டுரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடான வரலாற்று ஆய்விதழ் தொகுதி 12, 13 இல் இடம் பெற்றுள்ளது.
ஐராவதம் மகாதேவனின் மரணம் தமிழ் உலகிற்கு பேரிழப்பே!.
சரி, நக்கன் என்பது என்ன?
எஸ். குலசேகரன் எழுதிய சரித்திர புதினம் - அம்பலவன் பழுவூர் நக்கன்.
முதல் இராசசிம்மனின் குழுமூர்ப்போரில் பராந்தகப் பள்ளி வேளானான நக்கன் புள்ளன் பங்கேற்றுள்ளான்.
'வெல்வினையறியா நக்கன்' என்கிறது திருவிளையாடல் புராணம்.
இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரியில் குடியமர்த்தப்பட்ட 400 பெண்கள் தன் பெயருக்கு முன்னால் நக்கன் பெயரை சேர்த்துக்கொண்டார்கள் என்பது வரலாற்றுப்பதிவு.
குலசேகரதேவ பாண்டியன், நக்கன் நாச்சியார் என்கிற நடன மங்கைக்கு மூவாயிரத் தலைக்கோலி என்கிற பட்டத்தை வழங்கியிருக்கிறான். முதலாம் இராசராசனின் மனைவி நக்கன் பஞ்சமன் மாதேவி.
சித்தனவாசல் கீழ்குகையில் இச்சொல் வடிக்கப்பட்டுள்ளதால், சமண முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனப் பொருள் கொள்ள முடிகிறது.
நக்கன் என்கிற சொல்லின் வேர்ச்சொல் - நக்ந. இது வடமொழிச்சொல் என்கிறது பிங்கல நிகண்டு. நக்ந என்றால் நிர்வாணி.
பிற்கால சோழர்களின் காலத்தில் நக்கன் என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாக மறுவியிருக்கிறது. நக்கன் என்றால் நரியைக் குறிக்கும். சிவன் , நரியை பரியாக மாற்றியதால் அவனுக்கு அப்படியொரு பெயர். நக்கா- நக்கனை வழிபடும் சொல். "நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே - தேவாரம்.
வீட்டுக்கு வீடு சன், டண்டநக்கா டண் - சன் டிடிஎச் விளம்பரம்.
டண்டணக்கா நக்கா நக்கா - ஒரு திரைப்பட பாடல்.
நக்கன் - அன் என்பது ஆண் பாலைக்குறிக்கும் விகுதி என்றாலும் இச்சொல் பெண்ணைக்குறிக்கும், அம்மன் போன்று.
நக்கன் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டின் படி உறவு முறையைக் குறிக்கும் சொல் என்கிறார் ஐராவதம். உடன்பிறவா சகோதரி நங்கை, நக்கன். இச்சொற்களின் வேர்ச்சொல் அக்கை .
'நகு +அன் ' எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். நகு என்பது தமிழ்ச்சொல். இதன்படி நக்கன் என்பது இன்முகத்தினன்
பெரம்பலூர் மாவட்டத்தில் நக்கசேலம் என்கிற சிற்றூர் உண்டு. சைலம் - மலை. நக்கன் - நரி அல்லது சிவன்.
இதன்படி, நக்கன் என்கிற சொல்லிற்கு அருகன், நரி, சிவன், நிர்வாணி எனப் பல பொருள் உண்டு. ஆயினும் தற்காலத்தில் இச்சொல் ஆண், பெண் பாலின வேறுபாடின்றி வதைக்கும் 'ஏழைமை ' யைக் குறிப்பதாக இருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக