வகிபாகம்
'தமிழகத்தில் புரத வண்ணார்கள்' - த.தனஞ்செயன் எழுதிய ஓர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள் ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக் (கி.பி 6 - 12 ) காலத்திற்கு
முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ; செய்யும் தொழிலைக் கொண்டு சாதி, சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் பேரா.வீ.அரசு. ' தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ' குடித்தொழில் பெறும் வகிபாகம் ' .
அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ' ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் " சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது ".
இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய நாளிதழ் 'வீரகேசரி'. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ' கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் '. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் 'வகிபாகம்' ?
பேரா.கார்த்திகேசு சிவதம்பி - தமிழ்நல்லுலகு அறிந்த அறிஞர். இவர் பத்திரிகைத் துறையில் பயன்பாட்டிலிருக்கும்
பொருத்தமற்ற சில சொற்களைத் திருத்தி பயன்பாட்டிற்கேற்ப புதிய சொற்களாகப் பயன்படுத்தத் துவங்கினார். அதன்படி உதவி ஆசிரியர் என்பதை செம்மைப்படுத்துனர் என மாற்றினார். பிரதம ஆசிரியர் எழுதும் அல்லது தரும் படைப்புகளைத் திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதால் அதற்கு அப்படியொரு பெயர். அதேப்போன்று காப்பி எடிட்டிங் என்பதை செம்மைப்படுத்துதல் என்றார். அந்த வரிசையில் அவர் பயன்படுத்திய ஒரு சொல்தான் வகிபாகம்.
கொழும்பு இதழியல் கல்லூரி - ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் எழுதிய ஒர் அணிந்துரையில் 'ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்தால் அல்லது வரலாற்று ரீதியாக ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால் அதனை வகிபாகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் ' என்றார்.
இச்சொல் குறித்து தேடுகையில் தற்கால தமிழ் அகராதிகளும், ஈழத்தமிழ் அகராதிகளும் இச்சொல்லை சொற்களஞ்சியத்தில் சேர்த்திருக்கவில்லை எனத் தெரியவருகிறது. ஆனால் ஆங்கில அகராதி இச்சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Role allocation - வகிபாகம் ஒதுக்குதல்
Role of environment - சூழல் வகிபாகம்...இப்படியாக.
இதிலிருந்து வகிபாகம் என்பதை இப்படியாகப் பொருள் கொள்ளலாம். ஒரு பாத்திரமாக பங்கு வகித்தல்.

கருத்துகள்
கருத்துரையிடுக