கறள்
ஜூலை 22, 2018 காமதேனு இதழில் இரண்டு டொலர் என்கிற சிறுகதை வாசித்தேன். கதையின் ஆசிரியர் அ.முத்துலிங்கம் .
அவரது வழக்கமான சிறுகதையைப் போலவே இக்கதையும் கனடாவில் பயணிக்கிறது. ஒரு இளைஞன் வேலை தேடி அவசரமாக ஒரு பேருந்தைப் பிடித்து பயணிக்கிறான். அவனது அவசரத்திற்கு ஏற்ப பேருந்தின் வேகமிருக்கவில்லை. ஓரிடத்தில் பேருந்து நின்று ஒரு மாற்றுத்திறனாளியை சக்கர நாற்காலியுடன் உள்வாங்கிக்கொள்கிறது. பேருந்து திரும்பவும் பழையபடி பயணிக்கிறது. பயணச்சீட்டு வாங்க மாற்றுத்திறனாளி பாக்கெட்டுக்குள் துழாவுகிறார். அவரிடமிருக்கும் பாக்கெட் ஒன்றா, இரண்டா,... எட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பாக்கெட்டாகத் தேடுகிறார். இரண்டு டொலர் கிடைக்கவில்லை. வேலை தேடும் வாலிபன் உதவி செய்யலாமென்று இரண்டு டொலரை எடுத்து கையில் வைத்திருக்கிறான். அதற்குள் பேருந்து நிற்க மாற்றுத்திறனாளியை இடையில் இறக்கி விடுகிறது. சக்கர நாற்காலியுடன் கீழே இறக்கிவிடப்படும் அவருக்கு இரண்டு டொலர் கிடைத்துவிடுகிறது. அதை உயர்த்தி காட்டுகிறார். பேருந்து பின் வந்து மாற்றுத்திறனாளியை ஏற்றிக்கொண்டு திரும்பவும் விரைகிறது. இதுதான் கதை.
இக்கதையில் பேருந்து ஓட்டுநரை அவர் சாரதி எனச் சொல்லியிருப்பார். நாம் ட்ரைவர் என தூய தமிழில் அழைப்போம் ஹிஹி.. அல்லது ஓட்டுநரை ஓட்டுனர் என்போம். ஓட்டுநர் பெண்ணாக இருப்பார். அவரை வர்ணனை செய்யும் அ.முத்துலிங்கம் கறள் நிறம் என்கிறார்.
அது என்னதாம் கறள் நிறம்....? தேடத் துவங்கினேன். தமிழ் நிறம் அருஞ்சொற்கள் என்கிற இணைய தளம் tamil dictionary.50webs.com
அதற்கான தெளிவைக் கொடுத்திருந்தது. எத்தனையோ வகை நீலம், பச்சை, மஞ்சள் நிறங்கள்....அதில் கறள் என்கிற சொல்லுக்கு rust என ஆங்கிலத்தில் பொருள் கொள்ளும் படியாக துரு நிறம் என சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கறுப்பின பெண்ணின் நிறம் . என்னே அழகான தமிழ்ச்சொல் பாருங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக