இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முற்றாள்

படம்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார். குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில்  நவம்பர் -25 அன்று அதிகாலை 5.17 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு காலை 8 மணிக்கு அவசரமாக தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) முதலமைச்சராகவும், அஜித் பவார்    ( தேசியவாத காங்கிரஸ் ) துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்கள். இந்நிகழ்வு ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் வீதிக்கு வந்தன. THE TELEGRAPH என்கிற பத்திரிகை WE THE IDIOTS என தலைப்புச் செய்தியுடன் இந்திய ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என விமர்சனம் செய்தது.  மகாராஷ்டிரா மாநில பிரச்சனையைப் பொறுத்தவரைக்கும்  WE THE IDIOTS - நாம் முட்டாள்களே.  சரி, முட்டாள் என்பதன் வேர்ச்சொல் என்ன ? 2018 ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் தேடு பொறியில்  IDIOT எனத் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பெயர் வர அவ்வாண்டின் அதிக நபரால் தேடப்பட்ட சொல்லானது. முட்டாள் ஒரு தமிழ்ச்சொல். சிலையை அல்லது இராணியைப் பல்லக...

அபரஞ்சி

படம்
கமல்ஹாசன் , சினிமாவில் 60 ஆவது ஆண்டை தொடுவதை முன்னிட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் வடிவேலு, 'பரமக்குடி தந்த பத்தரைமாத்துத் தங்கம் கமல்' எனப் பேசினார். மாற்று என்பதே மாத்து என்பதாக திரிந்துள்ளது. சரி, பத்தரை என்பது என்ன? ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி. குண்டலம் என்றால் சுருள் என்று பொருள். கேசி - முடி. இந்த காப்பிய நாயகியின் பெயர் பத்தரை. பத்தரை, பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பெயர்.  இதன் பொருள், அனைத்தையும் உணர்ந்தவள் ( லியோ தமிழ் அகராதி). பத்தரை - பொன்னுடன் தொடர்புடைய ஒரு சொல். கணக்கதிகாரம் பொன்னை அளக்கும் அளவுகளை வெண்பாவாக பாடியுள்ளது. இதன்படி, 1பிளவு = 2 நெல் / 1 குன்றிமணி= 2 பிளவு / 1 மஞ்சாடி= 2 குன்றிமணி / 1 பணம்= 2 மஞ்சாடி /1 கழஞ்சு= 10 பணம்/ 1 கஃசு= 2 கழஞ்சு /1 வராகன்= 12 கழஞ்சு /1 ஓஞ்சை= 9 வராகன் /1 சேர்= 9 ஓஞ்சை /1 பவுன்= 12 ஓஞ்சை. ஒரு சவரன் பொன் என்பது தோராயமாக 8 கிராம். சரியாக 7.9881 கிராம். இதில் தூய பொன் என்பது 7.3 கிராம். பொன், கேரட் என்கிற அளவால் அளக்கப்படுகிறது. இந்த அளவை,...

முத்தவல்லி

படம்
பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி, மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.  சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நீதி மன்றத்தில் தொடங்கியது இந்த அயோத்தி வழக்கு. இவ்வழக்கின் தோற்றுவாய் ஹாசிம் அன்சாரி, ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ். இருவரும் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் தங்கள் நட்பைத்  தொடர்ந்தனர். இருவரும் சிறுவயது முதல் அயோத்தி நகர தெருவில் ஓடி, ஆடி விளையாடியவர்கள். டிசம்பர் 23, 1949 இல் நள்ளிரவில் பாபர் மசூதினினுள் ராமர் சிலை வைக்கப்பட்டபின் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்று வழக்குத் தொடுத்தனர். 2003 இல், பரமஹன்ஸ் மறைந்த போது, அவரது உடல் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருக்கிறார் ஹாசிம் அன்சாரி. இறுதி தீர்ப்பு வருகையில் இருவரும் உயிருடன் இல்லை.  ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்கிறது -தி இந்து நாளிதழ். சரி,முத்தவல்லி என்பது என்ன?  முத்தவல்லி , வக்ஃப் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு  சொல். இந்தியாவில் வக்ஃப் செல்லுபடி...

ஐயன்

படம்
அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர். எனவே, அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள் உ.பியில் மொழிகளை இணைக்க அமைந்த ' பாஷா சங்கம் ' எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைமையிடமான அலகாபாத் சங்கத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அவரது சிலையையும் அமைக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 10 இல் தென்கரை சாலைக்கு ' தமிழ்கே சந்த் கவி  திருவள்ளுவர் மார்க் ( தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை ) என இந்தி, தமிழ் பெயரில் பெயர்ச்சூட்டப்பட்டது. அதே நேரம் திட்டமிட்ட இடத்தில் சிலையை நிறுவ அம்மாநில அரசு தடை விதித்தது. சரி, ஐயன் என்பது என்ன? தொடக்கத்தில் ஐயன் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர்கள்  மூவர். அவர்கள், திருவள்ளுவர், ஐயனாரிதன் ( ஐயன் ஆரிதன் ), அயோத்திதாச பண்டிதர். தேவாரப்பாடல்கள் சிவன் ஐயன் என அழைக்கப்படுகிறான். அப்பன் என்பது பெருமாள். சிவன், திருமால் இருவருக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்கிறது புர...