மீசை
மக்களவை முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ' பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய போர் விமானி அபிநந்தனைப் பெருமைப்படுத்த வேண்டும். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் ' என வேண்டுகோள் வைத்தார். மீசை - எம்மொழிச் சொல்? குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து மலையாள எழுத்தாளர் ஹரீஷ் 'மாத்ருபூமி' வார இதழில் ' மீசை' என்றொரு தொடர் எழுதினார். இத்தொடர் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க தொடர் நிறுத்தப்பட்டது. மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யாவின் நாவல். மயிர் - வசைச் சொல் (லியோ தமிழ் அகராதி) ; மயிராண்டி - வசைச் சொல் ( கி.ரா வட்டார வழக்குச் சொல் அகராதி) . மயிருடன் நீதிமன்றத்தை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. 'மயிர்நீப்பின் வாழா...