அனலி
2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது. சூரியன் என்பதைத் தனித்துச் சொல்கையில் SUN என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில் SOLAR என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் ( SOLAR ECLIPSE), சூரிய குடும்பம் ( SOLAR SYSTEM ). சன் - சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ? சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு. தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு. ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என...