இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொந்தர்

படம்
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுஜித் , 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். நவீன தொழில்நுட்பமும், உரிய கருவிகளும் இல்லாததால்தான் இத்துயரம் நேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக தகவல் தொழிற்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு, ' ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்க நவீன கருவிகளைக் கண்டுபிடிக்க ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 இலட்சம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசுக்கு தகவல் தொழிற்நுட்பத் துறையின் மூலம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார். ஹேக்கத்தான் ( HACKATHON ) என்பது என்ன? ஹேக்கத்தான், பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்மார்ட் இண்டியா' என்கிற திட்டத்துடன் தொடர்புடைய ஒரு சொல். கடந்த செப்டம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 சென்னை ஐஐடியில் நடத்தியது. Hackathon, இச்சொ...

படம்
'டிக்டாக் வீடியோக்கள் என்ன சொல்கின்றன? - இந்து தமிழ் - பெண் இன்று இதழில் பிருந்தா சீனிவாசன் எழுதிய ஒரு கட்டுரை. வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதிலிருந்து மீளத்தான் இப்படிப் பொதுவெளியில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் அவர். ஆனால் சேலம் அரசு மனநல மருத்துவர் அபிராமி, 'ஆணோ, பெண்ணோ டிக்டாக், முகநூல் வழியே தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதை ' நார்சிசம்' என்கிறார்.  அது என்ன நார்சிசம், இதற்கு நிகரான தமிழ்ச்சொல் தொன்மைத் தமிழில் உண்டா? கிரேக்க இதிகாச கதையில் நார்சிசஸ் என்றொரு கதாப்பாத்திரம். தன் முகத்தை ஒரு நாள் ஏரியில் பார்க்கிறான். அவன் முகம் அவனுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவனது முகத்தைப் பார்த்து ரசிக்கிறான். ஒரு நாள் அவனது முகத்தின் மீது அதீத மோகம் வர ஏரியில் தெரியும் அவனது முகத்தைக் கட்டித் தழுவ நீரோடையில்  குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறான்.  Tiktok என்கிற வீடியோ naarcissim personality disorder என்கிற நோயியத்தை ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். Tiktok...

மோடி

படம்
பாரதியாரின் முப்பெரும் பாடல்களாவன கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு. மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். ஆனால் பாரதி, தன்னைத் தலைவனாகவும் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி பாடிய பாடல் இது. கண்ணன் - என் காதலன் பகுதியில், "ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன் மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே'' என்பதாக ஒரு வரி. இப்பாடலில் மோடி என்பதன் பொருள் என்ன ? தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்துப் பிள்ளை சிவபெருமான் குறித்து பாடியுள்ள ஒரு பாடலில்,  பிட்டுக்கு மண் சுமந்தது, பிள்ளைக் கறி கேட்டது, சாதி இல்லாதவன், தாயும், தந்தையும் இல்லாதவன், குறவர் வீட்டுப் பெண்ணை மகனுக்கு மணம் முடித்தவன்,...என்பதாகப் பாடிச் செல்லும்  ஒரு பாடலில் ' மறை ஓதிவணங்கு ...

எவன்கொலோ

படம்
ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது விவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டால் அது உலக நாடுகளைப் பாதிக்கும்,... என்றார். அவரது உரையை இந்திய பத்திரிகைகள்  ' hate speech' என எழுதின. அவரது உரைக்குப் பதிலளித்த  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா, ' Words matter in diplomacy (ராஜரீக உறவுகளில் வார்த்தைகள் முக்கியமானவை); Pogrom ( இனப்படுகொலை), bloodbath( இரத்தக்களரி), racial superiority ( இனவாதம்), pick up the gun( துப்பாக்கியைத் தூக்கு), fight to the end ( கடைசி வரை சண்டையிடு) என இம்ரான்கான் பயன்படுத்திய வார்த்தைகள் இடைக்காலத்தைப் பிரதிபலிப்பவை தவிர, 21 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை அல்ல' என்றவர் ஐ.நா பெருமன்றம் வன்சொற்களை விடவும் இன்சொற்களையே பெரிதும் விரும்புவதாக ஆங்கிலத்தில் உரையாற்றினார். 21 ஆம் நூற்றாண்டின் வன்சொற்களென இரு சொற்களை உலக நாடுகள் அறிவித்துள்ளன...