கோவில்


 எல்.கே. அத்வானியின் சுயசரிதை ' என் தேசம் என் வாழ்க்கை ' . ஒரு பக்கத்தில் சிந்தி கவிஞர் தான்சேன் என்று புகழப்படும் பகத் கன்வர் ராம்(1885-1938) பற்றி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  'கன்வர் ராம் எழுதி இசையமைத்து பாடிய  பாடல்களுக்கு இந்து, முஸ்லீம்கள் மெய் மறந்து நடனமிடுவார்கள் . அத்தகையவரை 1938 ஆம் ஆண்டு ஒரு முஸ்லீம் மத வெறியன் சுட்டு கொலை செய்தான்'.  

இதற்கும் முந்தைய பக்கங்களில் இந்திய பிரிவினை  குறித்தும், அதன் பேரில் நடத்தி முடித்த  காந்திஜியின் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் பெரிதாக பேசாமல் அத்தனை எச்சரிக்கையாக கடந்து செல்லும் அவர் , பகத் கன்வர் ராம் சம்பவத்தை திட்டமிட்டு எழுதுவதன்  காரணம்  நமக்கு புரியாததில்லை.  .

சரி, நான் தலைப்பினூடே விடயத்திற்கு வருகிறேன். பகத் கன்வர் ராமின் பாடலைக் கேட்பவர்கள் இன்றும் மெய் மறவாமல் இருக்க முடியாது. அவரது பாடலில்தான் என்னவொரு காந்தம்! என்னே வரிகள் !. ' நான் முஸ்லிமா இருந்து தொழட்டுமா? அல்லது ஹிந்துவாக இருந்து கோயிலுக்கு செல்லட்டுமா? அல்லது துடிதுடிப்பான இசைக்கு நடனமாடி ,எனது பக்தியை காட்டட்டுமா? எது உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது? '  ஒரு பக்தன்  கடவுளைப் பார்த்து  கேட்கும் பாடல் இது. 

இந்துகளால் தூக்கிப்பிடிக்கப்படும் மகா கவிஞராக இன்று போற்றப்படுகிறார் பகத் கன்வர் ராம். மதம் கடந்த எவரும் இப்பாடலுக்கு ஆட்படாமல் இருக்க முடியாது. இதே பாடலை கவிஞர் இப்படியாக எழுதியிருந்தால் இந்துத்துவவாதிகள் அவரைத் தூக்கிப்பிடித்திருப்பார்களா? எல்.கே. அத்வானியும் தன் சுய சரிதைக்குள் இதைக் கொண்டு வந்திருப்பாரா..? சற்றே யோசியுங்கள்...

'நான் முஸ்லிமாக இருந்து தொழட்டுமா? அல்லது இந்துவாக இருந்து கோயிலுக்குள் செல்லட்டுமா?'. கோயிலுக்கு, கோயிலுக்குள் இரண்டில் பின்னதை இந்துத்துவவாதிகள் ஏற்க மாட்டார்கள். சரி, கோயில் என்பது சரியா...?

கோயில் என்பதை கோ + இல் எனப் பிரிக்கலாம். இதில் நிலைமொழி ஈற்றும் வருமொழி முதலும் இணையாது. ஆகவே இரண்டையும் இணைக்க உடம்படு மெய் என்கிற ய்,வ் தேவைப்படுகிறது.

அ,ஆ,உ,ஊ,ஓ உயிரொலிகளுள் ஒன்று கடைசியிலிருக்க முதலில் உயிர் எழுத்துகளில் ஒன்று வருமொழியாக வந்தால் ' வகர மெய் ' தோன்றும்.

இதன்படி, நா + இல் = நா + வ் + இல் = நாவில்

திரு + ஆரூர் = திரு +  வ் + ஆரூர் = திருவாரூர்

கோ + இல் = கோ + வ் + இல் = கோவில்

 என்ன நண்பர்களே , இனி கோயிலுக்குள் நுழைய முடியாத மக்களை
கோவிலுக்குள்  அழைத்து செல்வோமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்