ஆரோகணம்
ஆனந்த விகடன் 18.7.18 தேதியிட்ட இதழுக்கு எழுத்தாளர் பொன்னீலன் ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் கடைசி கேள்வியும் அவரது பதிலும்.
கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளராக இருப்பதை எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்துள்ளீர்களா?
" எழுத்தாளர் , எந்த கட்சிக்குள்ளும் தன்னை அடைத்துகொள்ளக்கூடாது என்று என் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. அது , எழுத்தாளனின் சுதந்திரத்தை ஒடுக்கிவிடும். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் சொல்வார், ' எழுத்தாளர்கள் கொள்கையைக் குதிரையாக்கி அதன் மீது ஆரோகணித்துச் சுதந்திரமாகத் தன் படைப்புலகில் வலம் வர வேண்டும். குதிரையைத் தோளில் ஏற்றிச் சுமக்கக்கூடாது' என்று. இதன் பொருள் என்ன?".
இதை வாசிக்கையில் 'ஆரோகணித்து ' என்கிற சொல் வாசிப்பில் இடறியது. இது குறித்து தேடுகையில் இச்சொல்லை கல்கி, 'பார்த்திபன் கனவு' நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். நரசிம்ம சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்து ராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகச் சென்றார்.
கோகுல சேஷாத்ரி ' இராஜகேசரி' என்கிற நாவலில் ஓரிடத்தில் ' மழடியாருக்கு வேறு வழியில்லை. ஒரே ஓட்டமாக ஓடி அவருடைய புரவியை அடைந்து, அதன் கடிவாளத்தை மரத்திடமிருந்து விடுவித்துகொண்டு நொடியில் ஆரோகணித்து அவர் சென்ற திசையில் முடிந்த வரை வேகமாக புரவியைச் செலுத்திக்கொண்டு போனார்.
G.M.பாலசுப்பிரமணியன் எழுதிய சிறுகதை ' விளிம்புகளில் தொடரும் கதை ' . ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவர் மரணப்படுக்கையில் கிடக்க அவருடைய மனைவி கணவர் தூங்குகிறாரா, இறந்துவிட்டாரா என தவிக்கும் பாட்டை இக்கதை பேசியிருக்கும். ஓரிடத்தில் மனைவி கணவரின் இளமைப்பருவத்தை நினைத்து பார்க்கிறார். ' என்ன தைரியம் இவருக்கு? சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவிராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவது கம்பீரமாய் குதிரையில் வருவது போலிருந்தது'
சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்ற கிர்கீஸிய எழுத்தாளர் எழுதிய ஜமீலா நாவலில் ( மொழிபெயர்ப்பு - பூ.சோமசுந்தரம்) ஓஸ்மோன் குதிரையின் மேல் ஆரோகணித்து இங்குமங்குமாக நகர்ந்து சென்றார்.
ஆரோகணித்து - இச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், இச்சொல் குதிரையுடன் தொடர்புடையது. ஆங்கிலத்தில் Arrow என்றால் அம்பு. இச்சொல் ஸ்பானிய மொழியின் திரிபு. அம்பு என்கிற ஒன்று குதிரையில் பயணம் செய்யும் ஒரு வீரனின் உருவத்தை ஒத்தது. அம்பின் தலைதான் வீரனின் தலை. பின்னாலிருக்கும் இரு விளிம்புகள் வீரனின் இரு கால்கள். ஓர் அம்பின் வேகத்தில் குதிரையில் சவாரி செய்வதுதான் ஆரோகணித்து என பொருள் கொள்ளலாம்.
இச்சொல்லை G.M பாலசுப்பிரமணியன் தன் கதையில் உடம்பை முன் பக்கமாக வளைத்து விரைந்து சைக்கிள் ஓட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார். இன்று, விரைவாக பைக் ஓட்டுபவர்களிடம் இச்சொல் அதிகமாக புழங்குவதைக் கூர்ந்து கவனித்தால் அறியலாம். எனக்கேது அதற்கெல்லாம் நேரம், எனது வாழ்க்கை ஆரோகணித்து பறக்கையில் என்கிறீர்களா...?

கருத்துகள்
கருத்துரையிடுக