முத்தவல்லி
பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி, மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நீதி மன்றத்தில் தொடங்கியது இந்த அயோத்தி வழக்கு. இவ்வழக்கின் தோற்றுவாய் ஹாசிம் அன்சாரி, ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ். இருவரும் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் தங்கள் நட்பைத் தொடர்ந்தனர். இருவரும் சிறுவயது முதல் அயோத்தி நகர தெருவில் ஓடி, ஆடி விளையாடியவர்கள். டிசம்பர் 23, 1949 இல் நள்ளிரவில் பாபர் மசூதினினுள் ராமர் சிலை வைக்கப்பட்டபின் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்று வழக்குத் தொடுத்தனர். 2003 இல், பரமஹன்ஸ் மறைந்த போது, அவரது உடல் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருக்கிறார் ஹாசிம் அன்சாரி. இறுதி தீர்ப்பு வருகையில் இருவரும் உயிருடன் இல்லை. ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்கிறது -தி இந்து நாளிதழ். சரி,முத்தவல்லி என்பது என்ன? முத்தவல்லி , வக்ஃப் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். இந்தியாவில் வக்ஃப் செல்லுபடி...

கருத்துகள்
கருத்துரையிடுக